வெப்ஸ்டோரி

ஆட்டு பாலில் இருக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?

1

பசும்பால் என்பது அனைவரும் பருகக்கூடிய பாலாகும் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. ஆனால் ஆட்டுப்பால் பசும்பாலை விட அதிக சக்தியை தரக்கூடியது. ஆட்டுப்பால் தாய்ப்பாலுக்கு நிகரான ஒரு சிறந்த மருந்து என்று கூட சொல்லலாம். இந்த உண்மை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?  இதை பற்றி தெரிந்து கொள்ள இந்த கட்டுரையை மேலும் படியுங்கள் 

 

 

தாய்ப்பால் ஆகும் ஆட்டுப்பால் :

குழந்தைகள் குடிக்க ஆட்டுப்பால் மிகவும் உகந்தது. சில தாய்மார்களுக்கு பால் சுரப்பு குறைவாக இருக்கும். அது போன்ற தாய்மார்கள் குழந்தைக்கு பால் புகட்ட பசும்பாலை தேர்வு செய்வார்கள். ஆனால் பசும்பாலை விட ஆட்டு பாலுக்கு நன்மைகள் தரக்கூடிய பல குணங்கள் உள்ளன. எனவே குழந்தைகளுக்கு ஆட்டு பால் தேர்வு செய்வது தான் நல்லது

எளிதில் செரிமானமாகும்:

பொதுவாக பசும்பால் வயிற்றில் செரிமானமாக 1 மணி நேரம் ஆகும் என்றால் ஆட்டுப்பால் செரிமானமாக 20 நிமிடங்கள் தான் எடுக்கும். எனவே குழந்தைகளுக்கு கொடுக்க ஆட்டுப்பால் தான் உகந்தது 

தாய்மார்களுக்கு பால் சுரப்பு அதிகமாகும்:

ஆட்டு பாலில் வெண்ணெய் கொழுப்பு அதிகமாக இருக்கும். இதனால் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பால் சுரப்பு அதிகமாகும். ஆனால் பசும்பாலில் வெண்ணெய் கொழுப்பு குறைவு என்பதால் பால் சுரப்பு குறைவாகவே இருக்கும். இதனால் பால் கொடுக்கும் இளம் தாய்மார்கள் பசும்பால் பருகுவதை விட ஆட்டுப்பால் பருகுவது நல்லது. இதனால் குழந்தைக்கு கொடுக்க போதுமான பால் சுரப்பு ஏற்படும்.

வயிற்று போக்கு உண்டாகாது:

பசும்பாலில் உள்ள கொழுப்புக்கள் கடினமானது என்பதால் செரிமானம் சரியாக ஏற்படாமல் வயிற்று வலி, வயிற்று போக்கு ஏற்படும். ஆனால் ஆட்டுப்பாலில் கொழுப்பு மென்மையாக இருக்கும். இதனால் அஜீரணம், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படாது

சித்த மருத்துவத்தில் ஆட்டுப்பால் :

ஆட்டுப்பாலில் இரும்பு மற்றும் தாமிர சத்துக்கள் அதிகம் இருக்கிறது. இதனால் சித்த மருந்துகளை பெரும்பாலும் ஆட்டுப்பாலுடன் கலந்து உட்கொள்ள சொல்வார்கள். இரும்பு, தாமிர சத்து இருப்பதால் இது உணவு பாதையில் எளிதில் உறிஞ்ச பட்டு விடும். வியாதியும் எளிதில் குணமாக்கப்பட்டு விடும்

ஒவ்வாமை ஏற்படுத்தாது :

பசும்பாலை விட ஆட்டுப்பாலில் ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய லேக்டோஸ் சர்க்கரை அளவு குறைவாக இருக்கும். எனவே ஆட்டுப்பால்  ஒவ்வாமை ஏற்படுத்தாது. செரிமானமும் எளிதாகும். மேலும் இதில் ஆல்ஃபா எஸ் 1 கேசொலின் எனும் புரதச்சத்து உள்ளது. இது தாய்ப்பாலை கொடுக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நல்லது. இதனால் ஒவ்வாமை 90% ஏற்படாது என்று ஆய்வுகள் கூறுகின்றன 

தீப்புண்ணை ஆற்றக்கூடியது:

ஆட்டுப்பால் ஆண்டி இன்பிளமேட்டரி தன்மை கொண்டது. எனவே தீக்காயம் பட்ட இடத்தில் காய்ச்சாத ஆட்டுப்பாலை பஞ்சில் நனைத்து தடவி வர, தீப்புண் விரைவில் குணமாகும் 

இதயத்தை பாதுகாக்கும்:

ஆட்டுப்பாலில் செலினியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும். இதனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படாது. மேலும் இதில் நல்ல கொழுப்பு அதிகம் இருப்பதால் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும். எனவே இதயத்தில் எந்த பாதிப்பும் உண்டாகாது

நீரிழிவு நோய்க்கு நல்லது :

இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருக்கிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நலம் பயக்க கூடியது. அவர்களுக்கு இதய கோளாறு ஏற்படாது தடுக்கும். 

சுவாச கோளாறு நீங்கும்:

ஆட்டுப்பால் தினமும் உட்கொள்ள நுரையீரல் பிரச்சனை மற்றும் சுவாச கோளாறுகள் அறவே இல்லாமல் போய் விடும். இதை பனங்கற்கண்டு சேர்த்து குடிக்க நுரையீரல் பலப்படும்

எலும்புகளை பலமாக்கும் :

ஆட்டுப்பாலில் பசும்பாலை விட அதிக கால்சியம் சத்து உள்ளது. இதில் 35-40% கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இது எலும்புகளை பலப்படுத்தும். இதனால் பெண்களுக்கு ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு நோய்களை தடுக்கிறது

டிரெண்டிங்

உணவு

ஆரோக்கியம்

பிரெக்னென்சி டிப்ஸ்

கருவுற டிப்ஸ் 

குழந்தை வளர்ப்பு

பெண்கள் ஸ்பெஷல்

ஜோதிடம்

Scroll to Top